2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

‘மைத்திரி- மஹிந்தவுக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெறவில்லை’

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் தனது வீட்டில் எவ்வித கலந்து​​ரையாடல்களையும் முன்னெடுக்கவில்லையென, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனது வீட்டில் இரவு விருந்துபசார நிகழ்வொன்றே ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், அதில் கலந்துக்கொள்வதற்காகவே ஜனாதிபதி மைத்திரியும், மஹிந்தவும் வருகைத் தந்ததாக எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதைத் தவிர அங்கு எவ்வித அரசியல் கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லையென்பதுடன், குறித்த விருந்துபசாரத்தில் கலந்துக்கொள்ள வந்திருந்த ஏனைய உறுப்பினர்களுடன் வழமைப்போல சாதாரண உரையாடல்களே இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .