2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மைனர் துஷ்பிரயோகம்: இராணுவ அதிகாரிக்கு சிறை

Editorial   / 2023 செப்டெம்பர் 26 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது உறவினரின் மைனர் மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஓய்வு பெற்ற மூத்த இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி  ஆதித்ய படபாண்டிகே 15 வருட கடுங்காவல் தண்டனை விதித்தார்.

24 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட குற்றத்திற்காக விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் சேர்த்து, பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1000 இழப்பீடு வழங்குமாறும் குற்றவாளிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

2009 ஓகஸ்ட் 1 முதல் 31 ஆம் திகதி வரை 16 வயதுக்குட்பட்ட தனது உறவினரின் மைனர் மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக  பிரதிவாதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தார்.

இது தொடர்பான நீண்ட விசாரணையின் முடிவில், குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி அரசுத் தரப்பு நிரூபித்துள்ளதாகவும், அவர் தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .