2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மொட்டில் அதிருப்தி

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடைக்கால அல்லது கூட்டு அரசாங்கம் அமைப்பதை விடுத்து, மக்கள் வாக்குகளைக் கொண்டு, தனி அரசாங்கமொன்றே உருவாக்கப்பட வேண்டுமென, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சிமன்றத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பத்தரமுல்லயில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தலைமையில், நேற்று (08) மாலை இடம்பெற்ற, பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சிமன்றத் தலைவர்களது மாவட்ட நிறைவேற்றுச் சபைக் கூட்டத்தின் போதே, மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டது.

இதன்போது, இடைக்கால அரசாங்கமொன்றின் தேவை அத்தியாவசியமானதென, ஒருமித்துக் குரலெழுப்பப்பட்டதாக, மொறட்டுவை மாநகர சபையின் மாநகர முதல்வர் சமன்லால் பெர்ணான்டோ தெரிவித்தார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், இந்த யோசனை தொடர்பில் கலந்துரையாடத் தீர்மானித்துள்ளனர் என்றும் இந்தக் கலந்துரையாடல், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில், இன்று (09) இரவு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலின் போது, மேற்படி இடைக்கால அரசாங்கம் தொடர்பான தீர்மானமொன்று எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .