Editorial / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பொறுப்பினை ஏற்றுக்கொண்டால் அவர் தொடர்பில் நடைமுறை ரீதியிலான தீர்மானமொன்று எடுக்க நேரிடும் என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறான அழைப்பு விடுக்கப்பட்டால் அது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ, தற்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போஷகர்களில் ஒருவராவே உள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
42 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
42 minute ago
2 hours ago
3 hours ago