Janu / 2026 பெப்ரவரி 15 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிங்குராணை - தமன பிரதான வீதியின் பெரனிகம வளைவில் லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக தமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்கரைப்பற்று, பிரிவு 04 ஐச் சேர்ந்த 22 வயதுடைய நவாஸ் முஹம்மது நிசார் மற்றும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த 20 வயதுடைய முஸம்மில் ஸியாத் அஹமட் என்ற இருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் பிரதேசவாசிகளினால் உடனடியாக தமன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியப் பரிசோதனையின் போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமனயிலிருந்து ஹிங்குராணை நகரை நோக்கி லொறி பயணித்துக் கொண்டிருந்த போது, ஹிங்குராணையிலிருந்து தமன நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
29 minute ago
32 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
32 minute ago
41 minute ago
2 hours ago