Princiya Dixci / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் வழிநடத்தப்பட்ட 'நில் பலகாய' என்ற நீலப்படையணி, மீளவும் இயங்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தோல்வியைத் தழுவியதனைத் தொடர்ந்து, இந்தப் படையணியின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்த போதும், தற்பொழுது மீளவும் இந்தப் படையணியின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தகவல்களின்படி, நாளையதினம் (10) கொண்டாடப்படவுள்ள நாமல் ராஜபக்ஷவின் பிறந்த நாளுடன், இந்தப் படையணியின் பணிகளுக்குப் புத்துயிர் கொடுக்கப்படவுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்க காலத்தின்போது நடைமுறைக்கு வந்த நீலப்படையணி, பல்வேறு மோசடிகளுடன் தொடர்புபட்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதன்போது பெருமளவு நிதி சேகரிக்கப்பட்டு, அவற்றை குறித்த படையணி பயன்படுத்தி வந்ததாகவும், இதன்போது நிதி துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றதாகவும் முறைப்பாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025