Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 மே 27 , மு.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையகத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, ஒருதொகுதி வீடமைப்புத் திட்டத்தை தமிழக மக்கள் சார்பில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, இலங்கையிலிருந்து கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை- இந்திய மீனவ நலன்புரி அமைப்பின் ஆலோசகரான எஸ்.பி.அந்தோனிமுத்துவினால் இந்த மடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'பெருந்தோட்டப் பகுதிகளில் தங்கள் வீடுகளை இழந்துள்ள இந்திய வம்சாவளி மக்களுக்காக, ஒரு தொகுதி வீடமைப்புத் திட்டத்தினை தாங்கள்
தமிழக மக்கள் சார்பில் வழங்குவதன் மூலம் மீண்டும் ஒருமுறை தங்களை தரணி மற்றுமின்றி சர்வேசுரனும் ஆசீர்வதிப்பார் என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
தரணி போற்றும் தங்களை. தாங்கள் கொண்ட இலட்சியங்கள் அனைத்தையும் அடைந்திட வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கும் நாமும் எமது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் அளவில்லா ஆனந்தமும் மகிழ்ச்சியும் அடைகின்றோம்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பதாகவே தங்களை சந்திப்பதற்காக, திகதி கேட்டு நாம் அனுப்பிவைத்திருந்த கடிதம் தொடர்பிலும் கவனஞ்செலுத்துமாறும் அதற்கென ஒரு திகதியை குறித்தொகுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
இயற்கையின் கோரத் தாண்டவத்தால் தமிழகத்தின் உண்மையான தொப்புள் கொடி உறவுகளான இந்திய வம்சாவளி மலையக பெருந்தோட்ட மக்கள் பாரிய அழிவுகளுக்கு முகங் கொடுத்துள்ளதை தாங்கள் அறிவீர்கள். இந்திய அரசு உள்ளிட்ட பல சர்வதேச நாடுகள் உதவிக்கரங்களை நீட்டியுள்ளன.
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் தங்கள் வீடுகளை இழந்துள்ள இந்திய வம்சாவளி மக்களுக்காக ஒரு தொகுதி வீடமைப்பு திட்டத்தினை தாங்கள் தமிழக மக்கள் சார்பில் வழங்குவதற்கு முன்வரவேண்டுமென்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago