2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மைத்திரி-மஹிந்த இணையாவிடின் பயணம் இல்லை

Thipaan   / 2016 ஜனவரி 27 , பி.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாநூ கார்த்திகேசு

'நாட்டினதும் கட்சியினதும் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவாக இருந்தாலும் பிரதேச மட்டத்தில் பிரபல்யமான தலைவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார். இவ்விருவரும் ஒன்றாகப் பயணிக்காவிடின், கட்சிக்கு வெற்றியில்லை' என்று, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க, நீண்ட நாட்கள் இருந்தாலும் அக்கட்சியின் பிரபல்யமான தலைவர் சஜித் பிரேமதாஸ ஆவார். அவ்விருவரும் இணைந்து பயணித்தமையால்தான் கடந்த தேர்தல்களில், ஏனைய கட்சிகளை விடவும், முன்னோக்கிச் செல்வதற்கு, அக்கட்சிக்கு முடிந்தது என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 'கடந்த காலங்களில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட நிலையை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு ஏற்படுத்திக் கொடுத்து விடாதீர்கள்' என்று கேட்டுக் கொண்டார்.

 'ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளிருந்த உட்பூசல் தான், நீண்ட காலமாக ஆட்சியமைக்கவிடாது தடுத்தது என்று, சஜித் பிரேமதாஸவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்  கைகோர்த்தார்களோ, அன்றிலிருந்து தான் கட்சி, மக்கள் மத்தியில் மீண்டும் செல்வாக்குப் பெற்றது. இவ்வாறானதொரு குழப்பமான சூழ்நிலையில், கட்சியை விட்டுப் பலரும் வெளியேறினர். நானுட்படப் பலர், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கட்சியை விட்டே விலகிச் சென்றோம். ஆனால், புதிதாக ஒரு கட்சியை நாங்கள் உருவாக்கவில்லை. ஏனெனில் அது, நாட்டின் மற்றைய கட்சிகளுக்குச் சாதகமாக  அமையும் என்பதால் நாங்கள் அதனைச் செய்யவில்லை' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X