2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மைத்திரியை ஐ.தே.க காக்கும்

Gavitha   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூழ்ச்சிகளிலிருந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஐக்கிய தேசியக் கட்சி காக்கும் என, கட்சியின் பிரதித் தலைவரும் வீடமைப்பு அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தலாவையில்இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரைiயாற்றும் போதே அவர், இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர், 'ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர், ஜனாதிபதிக்கெதிராகச் சூழ்ச்சி செய்ய முற்படுவது ஏனெனவும் கேள்வியெழுப்பினார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கான ஆதரவை வழங்க ஐ.தே.க எடுத்த முடிவினூடாக, கணிசமானதொரு படியை அக்கட்சி எடுத்ததாகக் குறிப்பிட்ட அவர், எனினும் தற்போது, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலரே, ஜனாதிபதிக்கெதிராகச் சூழ்ச்சி செய்வதாக அவர் தெரிவித்தார்.

'யார் ஆதரவு தெரிவிக்கிறார்களோ இல்லையோ, ஜனாதிபதியை நாம் காப்போம்' என, அமைச்சர் தெரிவித்தார். அத்தோடு, சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்த வேண்டுமெனத் தெரிவித்துவிட்டு, அக்கட்சியைச் சேர்ந்த சிலர், புதிய கட்சியொன்றை உருவாக்க எண்ணுவது ஏனெனவும், அவர் கேள்வியெழுப்பினார். அதேவேளை, அரசாங்கத்தின் உதவியுடனும் தனியார் உதவிகளினுடனும், கிராம மீள உயிர்ப்பு வேலைத்திட்டம் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் சஜித் பிரேமதாச, தனியார் துறையின் உதவியுடன், சுமார் 200 கிராமங்கள், மீள உயிர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X