2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மின்சாரக் கதிரையே மேலானது: மஹிந்த

Kanagaraj   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சாரக் கதிரையிலிருந்து தப்பிய போதிலும், அதைவிடப் பெரிய கொடுமைகளை, தான் தற்போது அனுபவித்து வருவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மொரகல்ல கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ, அங்கு சென்ற ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், 'மின்சாரக் கதிரைக்குச் செல்வதை விடக் கொடுமையான மன அழுத்தத்தைக் கொடுக்கின்றனர். மின்சாரக் கதிரைக்குச் செல்வது போலத்தான் இதுவும் இருக்கிறது. இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்றால், மின்சாரக் கதிரையென்பது ஒருமுறை தான். ஆனால், மனஅழுத்தம் என்பது, வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டியதாக இருக்கிறது' என்றார்.

இதேவேளை, 'நான், ஒருபோதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குத் துரோகம் செய்யவில்லை. துரோகம் செய்யப்போவதுமில்லை. வாக்களித்த 58 இலட்சம் பேரும் துரோகமிழைக்கவில்லை. பின்னர் வாக்களித்த 48 இலட்சம் பேரும் துரோகமிழைக்கவில்லை. ஆனால், துரோகியானவர்கள் யார் என்பதே இங்குள்ள பிரச்சினையாகும்' என்று அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X