2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மூன்று சிறார்கள் மீட்பு

Kanagaraj   / 2015 நவம்பர் 18 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைவிடப்பட்டிருந்த நிலையில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த மூன்று சிறார்களை மீட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

மாத்தளை, எல்வல பிரதேசத்தில் உள்ள மூன்று வீடுகளிலிருந்தே குறித்த சிறார்களை மீட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவர்களில் ஒருவர் பெண் பிள்ளை என்றும் தெரிவித்தனர்.

மூன்று சிறார்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக உக்குவல சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவலையடுத்தே அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

பிள்ளைகளின் பெற்றோர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளமை, சிறைவாசம் அனுபவித்தல் மற்றம் பிள்ளைகளை கைவிட்டு சென்றமை ஆகிய காரணங்களையடுத்தே இவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X