2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மார்கொட் வல்ஸ்ரோம் யாழுக்கு இன்று விஜயம்

Thipaan   / 2016 ஏப்ரல் 25 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கோட் எலிசெபத் வல்ஸ்ரோம், யாழ்ப்பாணத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்யவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில் வருகைதந்துள்ள மார்கோட் வல்ஸ்ரோம், மங்கள சமரவீர, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரை நேற்றையதினம் சந்தித்தார். அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைச் சந்தித்து, இருநாட்டு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், யாழ் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X