2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

முறையிட்டவருக்கு பிடியானை

Kanagaraj   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த பொதுத் தேர்தலின் போது, தன் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் முறைப்பாட்டாளரான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தன்மீது தாக்குதல் நடத்தியதாக, அந்த ஆதரவாளர், முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, கம்பஹா மாவட்ட பதில் நீதவான் சஞ்சய லக்மால் முன்னிலையில் நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது, முறைப்பாட்டாளர், நீதிமன்றத்தில் பிரசன்னமாய் இருக்கவில்லை.

இதனையடுத்தே, அவருக்குப் பிடியாணை பிறப்பித்த பதில் நீதவான், வழக்கை ஜனவரி மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். இதேவேளை, குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X