2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவு- வெயாங்கொடை விபத்துக்களில் இருவர் பலி: ஒருவர் காயம்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மற்றும் வெயாங்கொடை ஆகிய இடங்களில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வேயாங்கொடை- நய்வல பிரதேசத்தில் வான்னொன்றும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுக்கொண்டு மோதிக்கொண்டதில் 22 வயதான இளைஞன் பலியானதுடன் 18 வயாதான இளைஞன் காயமடைந்துள்ளான்.

செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் வெயாங்கொடை மாளிகாதென்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, முல்லைத்தீவு மல்லாவி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளும் லொறியும் நேற்றிரவு மோதி விபத்துக்குள்ளானதில் 34 வயதான ஒருவர் பலியாகியுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .