2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மாவத்தகம சிறுமி கொலை தொடர்பில் புதிய தகவல்கள்

George   / 2016 ஜனவரி 30 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் மாவட்டம், மாவத்தகம, தல்கஸ்பிட்டிய பிரதேசத்தில் கொலைசெய்யப்பட்ட 13 வயது சிறுமி, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

குருநாகல் பெரிய வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஊடாக குறித்த பிரேத பரிசோதனை, நேற்று வெள்ளிக்கிழமை (29) மேற்கொள்ளப்பட்டது.

சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் (42 வயது) கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமி, வீட்டிலுள்ள சமையலறையிலிருந்து கடந்த வியாழக்கிழமை (28) மாலை சடலமாக மீட்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X