2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

யானைகளை விரட்டுவதற்கு எதிரான மனு தள்ளுபடி

Editorial   / 2025 நவம்பர் 10 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிராமங்களில் சுற்றித் திரியும் யானைகளை ஹம்பாந்தோட்டை யானைகள் சரணாலயத்திற்குள் விரட்ட வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கையை நிறுத்த உத்தரவிடக் கோரிய ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த மனு, ஞானந்தா அறக்கட்டளையால் தாக்கல் செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ரோஹந்த அபேசூரிய மற்றும் மேன்முறையீட்டுத் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுற்றியுள்ள கிராமங்களில் சுற்றித் திரியும் யானைகளை ஹம்பாந்தோட்டை யானைகள் சரணாலயத்திற்குள் விரட்ட வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கை யானைகளுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X