2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

யானை தாக்கியதில் தாய் பலி

Editorial   / 2025 ஒக்டோபர் 20 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

  மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில் காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

பன்சேனை, வாதகல்மடு எனும் கிராமத்தில் குறித்த பெண் தனது வீட்டில் திங்கட்கிழமை (20)அதிகாலை தூங்கிக் கொண்டிருக்கையில், தகரத்தினால் அமைத்த வீட்டினுள் இருந்த நெல்லினை உண்பதற்காக வந்த காட்டு யானையை கண்டு பயத்தில் வெளியே ஓடிய போது யானை தாக்கியதில் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளதாக அறிய முடிகிறது.

இச்சம்பவத்தில் மரணமானவர் நான்கு பிள்ளைகளின் தாயான வைரமுத்து மலர் வயது 58 என்பவராவார். சம்பவ இடத்திற்கு வந்த வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன். 

 

 வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப் பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டு விசாணைகளை மேற்கொண்ட பின் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை எடுத்துச் செல்லுமாறு பணித்துள்ளார்.

 

இதேவேளை மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தனின் அனுமதிக்கமைவாக பிரதேச செயலகத்தினால் யானை தாக்கி இறந்தமைக்காக பத்து இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படதுடன் இதன் முற்பணமாக

மரண சடங்கிற்கு இறந்தவரின் மகனிடம் ஒரு இலட்சம் ரூபாய் காசோலையினை கிராம உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தரினால் வைத்தியசாலையில் வைத்து வழங்கப்பட்டது

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .