2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

யாழ் இளைஞர்களை இலக்கு வைத்த இருவர் கைது

Editorial   / 2025 நவம்பர் 03 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

யாழ்ப்பாண நகரில் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த இருவர், திங்கட்கிழமை (03) கைது செய்யப்பட்டனர். 

சந்தேக நபர்களிடம் இருந்து 3,200 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய  கஸ்தூரியார் வீதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த அவர்களை சோதனையிட்டபோது போதை மாத்திரைகள் வைத்திருந்த கண்டுபிடிக்கப்பட்டது.

ஐந்து சந்தி பகுதி அருகில் வசிக்கும்  21 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் தொடர்பாக பொலிஸாரின் கைது நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான தட்டுப்பாடு காரணமாக சந்தேக நபர்கள் பத்து போதை  மாத்திரைகள் அடங்கிய அட்டையை 3000 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X