2021 மே 17, திங்கட்கிழமை

’யானையும் டெலிபோனும் இணைந்து செயற்படும்’

Editorial   / 2021 மார்ச் 03 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நாம் செயற்படுவோம் என, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, மோசடி அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுக்காத ஐ.தே.க உறுப்பினர்களுடன் மட்டுமே இணைந்து செயற்படும் என்றார். 


ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அனைவரும், ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாவர். எனினும், ஐ.தே.கவுடன் இருந்த முக்கிய பிரச்சினைகள் காரணமாகத் தனித்துச் செல்லவேண்டிய நிலைமையொன்று ஏற்பட்டது என்றார். 

ஆனால், ஐக்கிய மக்கள் சக்திக்கு, ஐக்கிய தேசிய கட்சியுடன் தற்போதைக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லையெனத் தெரிவித்த அவர், கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது, ஐ.தே.கவின் நிலைமையை நாங்கள் புரிந்துகொண்டோம் என்றார். 


எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு, டெலிபோனை சின்னமாகக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி உள்ளது. அதுவும் யானையைச் சின்னமாகக் கொண்ட ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கும் தயாராகவே இருக்கிறது என்றார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .