2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

யானை தாக்குதலில் இளம் தாய் பலி: குழந்தை தப்பியது

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 யானை தாக்குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பகுதியில் திங்கட்கிழமை (04) அன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மகிழவெட்டுவானை சேர்ந்த 35 வயதுடைய ரவிச்சந்திரன் பசுபதி என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் வீட்டின் முற்றத்தில் சம்பவதினமான திங்கட்கிழமை (04) அன்று இரவு 7.00 மணியளவில் தனது 3 வயது பெண் குழந்தையுடன் தாய் இருந்துள்ள நிலையில்  குடிமனைக்குள் உட்புகுந்த யானை அவர்கள் மீது தாக்கியதில் தாயார் சம்பவ இடத்திலே உயிரிழந்ததுடன் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.

இதையடுத்து உயிர் தப்பிய குழந்தையை மீட்டதுடன் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கனகராசா சரவணன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X