2026 ஜனவரி 24, சனிக்கிழமை

யாழில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் தனிமைப்படுத்தலில்

J.A. George   / 2021 ஜூன் 04 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசலில்  தொழுகையில் ஈடுபட்ட 14 பேர்  சுகாதார பிரிவினரால் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பச்சை பள்ளியில் இன்று (04) சிலர் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். 

அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் குறித்த பகுதி பொது சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்த 14 பேரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். 

அவர்களில் சிலர் வீடுகளிலும் சிலர் பள்ளியிலும் எதிர்வரும் 14 நாட்களுக்கு  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

-எம்.றொசாந்த் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X