Janu / 2025 நவம்பர் 30 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிவாரண உதவிப் பொருட்களை பொதுமக்கள் வழங்குவதற்காக யாழ். மருத்துவ பீடத்தில் பொருட்கள் சேகரிப்பு மையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (30) காலை 7.00 மணியிலிருந்து பிரதான வாயில் அமைந்துள்ள பகுதியில் (ஆடியபாதம் வீதி) அமைக்கப்பட்ட இடத்தில் சேகரிப்பு மையம் உள்ளது. உதவி செய்ய விரும்பும் மக்கள் உடனடித் தேவையான பொருட்களான
- குழந்தையுணவுகள் (பிஸ்கட், பால் மா, ரஸ்க்)
- அணையாடைகள் ( Sanitary pads & Diaper) (பெண்களுக்கு & குழந்தைகளுக்கு)
- குழந்தைகளுக்கான சோப்
- தொற்றுநீக்கிகள்
- நுளம்பு வலை
- பிளாஸ்டிக் பாய்
- படுக்கை விரிப்புகள்
- தேயிலை
- பால்மா
- சீனி
- நுளம்பு திரி
- பிஸ்கெட் வகைகள்
- பொதி செய்யப்பட்ட உணவுகள்
- தண்ணீர் போத்தல்கள்
- தறப்பாள்
- Towels
போன்றவற்றை வழங்கலாம்.
முதற்கட்ட நிவாரணமாக இன்றைய தினம் காலை 11 மணிக்கு, பாரவூர்தி செல்ல இருக்கிறது. தொடர்ந்து மறு அறிவித்தல் வரை சேகரிப்பு பணி தொடர்ந்து நடைபெறும். சேகரிப்பு மையம் தொடர்பான அனைத்து பணிகளும் யாழ் மருத்துவ பீட மாணவர் ஒன்றியம் முன்னெடுக்கும்.
14 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago