2025 ஜூலை 05, சனிக்கிழமை

யோஷிதவின் முகத்தில் சத்திரசிகிச்சை

Editorial   / 2018 டிசெம்பர் 30 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்‌ஷ கடந்த வாரம் இடம்பெற்ற ரகர் விளையாட்டுப் போட்டியொன்றின் போது விபத்தொன்றுக்கு முகங்கொடுத்து கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தினால் யோஷிதவின் தலை மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டு, சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், யோஷிதவின்  கன்னங்களில் இரும்புத் துண்டுகள் பொருத்தப்பட்டு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் யோஸிதவை ரகர் விளையாட்டில் ஈடுபடவேண்டாமென அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்ட வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .