Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஜூன் 02 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை- பம்புறுகஸ்வெவ பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளான நிலையில் மூன்று பிள்ளைகளின் தாய் இன்றிரவு 07 மணியளவில் கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இவ்வாறு யானையின் தாக்குதலுக்குள்ளானவர் மூன்று பிள்ளளைகளின் தாயாரான திருகோணமலை-பம்புறுகஸ்வெவ பகுதியைச்சேர்ந்த ஏஸ்.நதீகா (35வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த பெண் வீட்டுக்கு பின் புறமாகவுள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்கச்சென்ற போது மறைந்திருந்த யானை தாக்கியதாகவும் அதனையடுத்து கிணற்றடியில் காட்டு யானை சத்தமிட்டதையடுத்து பார்த்த வேளை மனைவி விழுந்து கிடப்பதையும் அவதானித்ததாக கணவரான எம்.கருணாதிலக பொலிஸாரிடம் தெரிவித்தார்.
தாக்குதலில் காயமடைந்த பெண்னை மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் கோமரங்கடவெல வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர்.
3 hours ago
9 hours ago
9 hours ago
27 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
9 hours ago
27 Aug 2025