2025 மே 21, புதன்கிழமை

யுவதியை கொன்றவர் மலையில் சிக்கினார்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

18 வயதான யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலைசெய்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 20 வயதான இளைஞனை, மஹியங்கணை, செனசுமிகல மலையுச்சியொன்றிலிருந்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, அவர், பணயக் கைதியாக வைத்திருந்த 15 வயதான சிறுமி, மயக்கமடைந்த நிலையிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் 25 பேர் மற்றும் ஊர்காவற்படையினர் 80 பேர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே அவர், நேற்று மாலை கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யும் போது அவர், நஞ்சருந்தி இருந்ததாகவும் பணயக்கைதியை பிடித்துவைத்திருந்த சிறுமிக்கு நஞ்சூட்டியிருந்ததாகவும் தெரிவித்த பொலிஸார், அவ்விருவரையும் மஹியங்கணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.  

கெமுனுபுர, ஆடைத் தொழிற்சாலைக்கு கடந்த முதலாம் திகதியன்று வேலைக்குச் சென்றபின்  காணாமல் போன மஹியங்கணை தம்பகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதான ரம்யா விதர்ஷனி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அரை நிர்வாண நிலையில் புதன்கிழமை (02) சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .