2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

யோஷிதவுக்கு ஆதரவு: நான்கு வீரர்கள் இடைநிறுத்தம்

Thipaan   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

டயலொக் றக்பி லீக் போட்டியின் போது, 'Y007' என எழுதப்பட்டிருந்த பட்டியை கைகளில் அணிந்திருந்த, கடற்படை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த வீரர்கள் நால்வரை இடைநிறுத்தியுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்தார்.

தியகமயில், ஞாயிற்றுக்கிழமை(14) இடம்பெற்ற போட்டியின் போதே, கடற்படை விளையாட்டுக் கழகத்தின்  முன்னாள் தலைவர்  யோஷித ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், குறித்த வீரர்கள் பட்டிகளை அணிந்திருந்தனர்.

இதற்கமையவே, குறித்த வீரர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் எனவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .