Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 பெப்ரவரி 07 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரும், கடற்படை லெப்டினனுமான யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக, மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான சான்றுக் கோப்புகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் மற்றும் ஒழுங்குகள், நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பிரதமர் அலுவலக பணியாட்தொகுதியின் பிரதானியுமான சாஹல ரத்னாயக்க அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க்ஸ் (CSN) ஊடக நிறுவனத்தின் ஊடாக பணச்சலவை செய்தமை, அரச சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து, நீதியான சமூகத்துக்கான குடிமக்கள் என்ற அமைப்பினால், பொலிஸ்மா அதிபரிடம் செய்திருந்த முறைப்பாட்டின் பிரகாரம், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு, 2015.03.15 அன்று, விசாரணைகளை முன்னெடுத்தது.
அதனடிப்படையில் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவு, கடுவலை நீதவான் நீதிமன்றத்தின் அறிக்கையிட்டிருந்தது.
அதனடிப்படையில், அந்த நீதிமன்றத்துக்கு, மேலதிகமாக 20 அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன. விசாரணையின் பெறுபேறுகளின் அடிப்படையில், நிதிக்குற்ற விசாரணைப்பிரிவு அதிகாரிகள், சாதாரண சட்டத்தின் பிரகாரம், எந்தவொரு பொலிஸ் அதிகாரிகளுக்கு விசாரணை செய்வதற்கான அதிகாரம் பயன்படுத்தப்படுகின்றது.
கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க்ஸ் நிறுவனத்துக்காக, ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனத்தை ஆரம்பிப்பதற்காக மூலதனமாக 234 மில்லியன் ரூபாய் கிடைத்த முறைமை, நிறுவன நிதியின் பங்குகளின் 7,00,004 ஆகும். அவற்றின் பெறுமதி 7 மில்லியன் ரூபாயாகும். மிகுதியான மூலதனம் கிடைத்த முறைமை, இங்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
அவை, போலியான கணக்கு வழக்கு மற்றும் வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமான செயற்பாடுகளின் ஊடாகத் திரட்டப்பட்ட நிதியென்பது, விசாரணைகளிலிருந்து தெளிவானது. வெளிநாட்டு நிறுவனங்களின் ஊடாகக் கிடைத்த 2.3 மில்லியன் அமெரிக்க டொலர், கணக்கு வழக்கின் ஊடாக கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க்ஸ் நிறுவனத்துக்கு, மூலதனத்துக்குத் தேவையான ஏனைய நிதிகள் திரட்டப்பட்டமை, விசாரணைகளிலிருந்து வெளிப்பட்டது.
இந்தக் கணக்கு வழக்கு, இலங்கையில் தற்போது செயற்பாட்டில் இருக்கின்ற வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது.
கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க்ஸ் நிறுவனத்துக்கு நிதி கிடைத்த முறைமை, கணக்கு வழக்குகளில் காட்டப்பட்டுள்ள முறைமை, உண்மையாக இடம்பெறவில்லை என்றும், அதனை ஆரம்பிப்பதற்காக மூலதனமாகப் பயன்படுத்தப்பட்ட நிதி, பணச்சலவையின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட நிதி என்று, சட்டம் மற்றும் சம்பங்களை அடிப்படையாக வைத்து முடிவுக்கு வருதல் புலனாகின்றது.
இந்த நிறுவனத்தின் ஆவணங்களில் அடிப்படையில், இந்த பங்குதாரர்கள் அனைவரும் ஆரம்பப் பணிப்பாளர் என்றும் அவர்களில், ரொஹான் வெலிவிட்ட, கவிசான் திஸாநாயக்க, ரவிந்திர பெர்ணான்டோ மற்றும் சாடியா கருணாஜீவ ஆகியோர் அடங்குகின்றனர்.
இந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியாக, நிஷாந்த ரணதுங்க செயற்பட்டுள்ளார். நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான மின்னஞ்சல் செய்திகளை ஆய்வுக்கு உட்படுத்திய போது, கடற்படையின் லெப்டினன்ட் யோஷித ராஜபக்ஷ என்பவர், நிறுவனத்தின் தலைவர் என்றும், தீர்மானம் எடுக்கும் தலைமை அதிகாரியாக செயற்பட்டுள்ளார்.
பணச்சலவைக் குற்றம் செய்யப்பட்டுள்ளது என்று இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, இந்த குற்றச்சாட்டுத் தொடர்பில், அவரது கூற்றுகள் ஊடாக அவர் குற்றமற்றவர் என்று வெளிப்படவில்லை.
அதனடிப்படையில், குற்றவியல் தண்டனைக் கோவைச்சட்டத்தின் பிரகாரம் கடுவலை நீதவானால், சந்தேகநபர், 2016.02.11 வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட குற்றத்துக்கு மேலதிகமாக இந்த சந்தேகநபர், முறைகேடான ஆவணங்களைத் தயாரித்தல், குற்றவியல் நம்பிக்கையை மோசடி செய்தல், சுங்கச் சட்டத்தை மீறியமை மற்றும் கம்பனிகள் சட்டத்தை மீறியமை ஆகியன தொடர்பில் வெளிப்படையாகியுள்ளது. அரச சொத்துக்களைத் தவறாக பயன்படுத்தியமையும் வெளியாகிகொண்டிருக்கின்றது. இந்தக் காரணங்களை அடிப்படையாக வைத்து, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தச் சந்தேகநபரை, விளக்கமறியலில் வைக்காமல், சிற்சில விசாரணைச் செயற்பாடுகளை முறையாகவும் தெளிவாகவும் முன்னெடுக்கமுடியாது. அவற்றின் அடிப்படையில், விளக்கமறியலில் வைக்குமாறு, நிதிக்குற்ற விசாரணைப்பிரிவு கோரியிருந்தது.
இந்நிலையில் சகல விசாரணையின் பின்னர், மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான சான்று கோப்புகள், சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்தக் காரணங்கள் யாவும், பொலிஸ் திணைக்கள அறிக்கையின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும் என்பதைக் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன். தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளதன் பிரகாரம், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் வகையில், இந்தச் சகல விசாரணைகளும் முன்னெடுக்கப்படும்.
இதில் எந்தவிதமான விசாரணைகளுக்கு, ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், அரசாங்கத்தின் தலைமையதிகாரிகள் மற்றும் அதிகாரிகளினால் எவ்விதமான அழுத்தங்களோ அல்லது தலையீடுகளோ இருக்காது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025