Editorial / 2025 ஒக்டோபர் 07 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளை பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் ஏழாம் வகுப்பு மாணவர்கள் ஏழு பேர், ஆய்வகத்தில் உள்ள ரசாயனப் பொருளை செவ்வாய்க்கிழமை (07) நாக்கில் செலுத்தியதால் தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.
ஐந்து மாணவர்களும் இரண்டு மாணவிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலையில் ஏழாம் வகுப்பு மாணவர்கள் குழு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எம்.எஸ்.கே. விக்ரமநாயக்க தெரிவித்தார். கடந்த சில விடுமுறை நாட்களில் பாடசாலையில் ஆய்வகம் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் தூக்கி எறியப்பட்டிருந்தன.
அதன்படி, மிளகாய் தூள் என்று நினைத்து அங்கு சிதறிக் கிடந்த சிவப்பு நிறப் பொருளை மாணவர்கள் சுவைத்ததாகக் கூறப்படுகிறது.
1 hours ago
2 hours ago
09 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
09 Dec 2025