2025 ஜூலை 05, சனிக்கிழமை

ரஜரட்டை பல்கலைக்கழகம் மீண்டும் 16ஆம் திகதி திறக்கப்படும்

Editorial   / 2019 ஜனவரி 13 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 29ஆம் திகதியிலிருந்து மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தை எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து மீண்டும் திறப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆனந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

பல்வேறு காரணங்களால் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ள 16 மாணவர்களின் வகுப்புத் தடையையும் நீக்குவதற்கு நிர்வாக சபை தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ள 16 மாணவர்களினதும் வகுப்புத் தடையை நீக்குமாறு கோரி கடந்த 29ஆம் திகதி பல்க​லைக்கழக மாணவர்களால் பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதையடுத்து, மஹிந்தலை வளாகத்தில் அமைந்துள்ள 4 பீடங்கள் மூடப்பட்டன.

இதற்கமைய கடந்த வௌ்ளிக்கிழமை கூடிய நிர்வாக சபை குறித்த 16 மாணவர்களின் வகுப்புத் தடையை நீக்கவும் பல்கலைக்கழகத்தை மீண்டும் 16ஆம் திகதி திறக்கவும் தீர்மானித்ததாக துணைவேந்தர் ஆனந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .