2021 மே 06, வியாழக்கிழமை

‘ரஞ்சனுக்காக ​எம்.பி பதவியைத் துறப்பேன்’

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 12 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

​மே மாதம் முதலாவது அமர்வில் தான், ரஞ்சன் ராமநாயக்கவுக்காக அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, தான் அரசாங்கத்துக்கு சவால் விடுப்பதாகவும் அரசாங்கம் அதனை நிறை​வேற்றினால் தான் மீண்டும் இந்த நாட்டு மக்களுக்கு தனது முதுகெலும்பை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மே மாதம் கூடவுள்ள பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது, ஹரின் பெர்ணான்டோவால் விசேட அறிவிப்பொன்று விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,ஐக்கிய மக்கள் சக்தியின் தகவல்களுக்கமைய ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் பாராளுமன்றம் வருவதற்காக, தனது தேசியப் பட்டியல் ஆசனத்தை தியாகம் செய்யவுள்ளாரென்று தகவல்கள் தெரிவித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .