Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2017 நவம்பர் 22 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் அவமதித்து உரையாற்றியதாகக் கூறப்படும், அந்த உரையின் குரல் பதிவை, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றஞ்சாட்டி அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நேற்று (21) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, உயர் நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.
அந்தக் குரல் பதிவை, டிசெம்பர் மாதம் 14ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களும், ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதியன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
அதடினப்படையில், ஒக்டோபர் 25ஆம் திகதியன்று, நீதிமன்றத்துக்கு, அவர் அழைக்கப்பட்டிருந்தார். அன்றையதினம் ஆஜரான பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை, நீதிமன்றத்தில் நேற்று (21) ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்து. அதனடிப்படையிலேயே, அவரும் ஆஜரானார்.
அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்த வண. மாகல்கந்தே சுதந்த தேரர், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சுனில் பெரேரா ஆகியோரும் நீதிமன்றத்தில் நேற்றையதினம் ஆஜராகியிருந்தனர்.ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதியன்று, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நடத்திய ஊடக சந்திப்பில், சட்டத்தரணிகளில் பெரும்பாலானோர் ஊழல்வாதிகள் என்று குறிப்பிட்டிருந்தார்.
பிரதியமைச்சரின் இந்தக் கூற்று, நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமைந்திருந்தது என்று, அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
33 minute ago
2 hours ago