Nirosh / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக, நான்கு வருட கடூழியச் சிறைதண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, சபையில் நேற்று (07) அறிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் நேற்று (07) கூடிய பாராளுமன்ற அமர்வை ஆரம்பித்து வைத்து, சபாநாயகரின் அறிவிப்பை வெளியிட்ட போதே, அவர் மேற்கண்டவாறு அறிவித்தார்.
ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை, பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின்படி இரத்துச் செய்வதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பாராளுமன்றச் செயலாளர் நாயகம் அறிவித்திருப்பதாகவும் இதன்படி, அரசியலமைப்பின் 66(d)இன் படி, கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனமொன்றுக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.
இதேவேளை, ரஞ்சனால் வெற்றிடமாகியுள்ள கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பதவி, 2020 பொதுத் தேர்தலின் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ், கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அஜித் மான்னப்பெருமவுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தத் தேர்தலில் அவர், 47,212 விருப்பு வாக்குகளைப் பெற்று, ஐ.ம.சவின் கம்பஹா மாவட்ட விருப்பு வாக்குப் பட்டியலில், 5ஆவது இடத்தைப் பெற்றிருந்தார்.
எவ்வாறாயினும், அஜித் மான்னப்பெருமவின் பெயர், மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரியினால் தேர்தல்கள் ஆஐணக்குழுக்குக்கு அனுப்பி வைக்கப்படும் பட்சத்திலேயே, அது வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
22 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago