2026 மே 13, புதன்கிழமை

dd

’ரணில் ஜனாதிபதி, நான் பிரதமர் என்று சஜித்தால் ஏன் கூற முடியாது?’

Freelancer   / 2026 மே 13 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய அரசியல் சூழலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் ஒன்றிணைகின்றமை குறித்து நிலவும் விவாதங்களுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தனது கருத்தினை முன்வைத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தான் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவதற்குத் தயார் எனத் தெரிவிக்கும் நிலையில், அதற்கு ஒரே ஒரு எளிய வழிமுறை மட்டுமே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சஜித் பிரேமதாச, ரணில் ஜனாதிபதியாக இருக்கட்டும், நான் பிரதமராகச் செயல்படுகிறேன் என்கிற ஒரு தெளிவான அறிவிப்பை வெளியிட்டால், பிரிந்துள்ள இரு தரப்புகளும் மிக எளிதாக ஒன்றிணைந்துவிடும் என்று அஜித் மன்னப்பெரும தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவை அரசியலுக்குக் கொண்டு வந்தவர் ரணில் விக்கிரமசிங்க என்பதையும், இன்றும் சஜித் அவரை மரியாதையுடன் 'சர்' என்றே அழைப்பதையும் அவர் தனது உரையில் நினைவுபடுத்தினார்.

இவ்வாறானதொரு நிலையில், கட்சிகள் ஒன்றிணைவதற்கு நீண்ட பேச்சுவார்த்தைகளோ அல்லது குழுக்களின் பரிந்துரைகளோ தேவையில்லை எனத் தெரிவித்த அவர், சஜித் பிரேமதாசவின் இந்த ஒரு பிரகடனம் ஒட்டுமொத்த அரசியல் பிரிவினையையும் முடிவுக்குக் கொண்டுவரும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .