2022 மே 20, வெள்ளிக்கிழமை

’ரணில் யாரென்று எமக்கு தெரியும்’

Freelancer   / 2022 மே 14 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரணில் விக்கிரமசிங்க யாரென்று  எமக்கு சொல்லிக்கொடுக்க  ஜனாதிபதி  முற்படுகின்றார்.ரணில் விக்கிரமசிங்க  இப்போது அவர்களுக்கு  நல்லவராக தெரியலாம், ஆனால் இரண்டு தசாப்த காலமாக ரணிலுடன் அரசியல்  செய்த நபர்கள் நாங்களே. ஆகவே ரணில் யாரென்று எமக்கு கற்பித்துத்தர வேண்டிய அவசியம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் செய்தியார் சந்திப்பு நேற்று (13) கொழும்பில் இடம்பெற்ற போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவையும், ராஜபக்‌ஷ அரசாங்கத்தையும் மக்கள் நிராகரித்து வருகின்றனர். அதனால் தான் அவர்களுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் பலமடைந்துகொண்டு வருகின்றன.

அவ்வாறான ஆட்சியாளர்களுடன் கை கோர்த்து ஆட்சி செய்வது ஜனநாயக ஆட்சியாக அமையாது. மக்களுக்கு எதிராக செயற்படும் துரோகிகளுக்கு வரலாற்றில் ஒருபோதும் இடமில்லை. ரணில் விக்கிரமசிங்கவும் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரேயாவார்.  
 
ரணில் விக்கிரமசிங்கவுடன்  பயணிக்க முடியாது என்பதற்காகவே அவரிடம் இருந்து விலகி சஜித் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கினோம். நாம் எடுத்த தீர்மானம் சரியென்பதை மக்கள் ஏற்றுக்கொண்டனர். அதனால் தான் ஐந்து இலட்சம் வாக்குகளை பெற்ற ரணிலினால் இறுதி தேர்தலில் இருபதாயிரம் வாக்குகளை கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது. மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஜனாதிபதியையும்  பிரதமரையும் வைத்துக்கொண்டு இந்த அரசாங்கத்தினால் முன்னோக்கி பயணிக்க முடியாது. ஸ்திரமான அரசாங்கம் ஒன்று அமையாது சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்களை ஒருபோதும் பெற்றுக்கொள்ளவும் முடியாது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .