2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ரணிலிடமிருந்து மோடிக்கு கடிதம்.

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 24 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரின் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை  தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு புதன்கிழமை (23) அன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மேலும் அந்த கடித்த்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன்.

​மேலும் "சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து  நடத்தப்பட்ட இவ் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை அறிந்து நான் மிகவும் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

இந்தக் கொடூரமான குற்றத்தை வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில், உங்களுக்கும், இந்திய அரசுக்கும், மக்களுக்கும், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்."

"அமைதியான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப நீங்கள் ஒன்றிணைய முன்வருவீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்  தெரிவித்திருந்தார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X