2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

ரயில் சேவைகள் சில இடைநிறுத்தம்

Freelancer   / 2022 டிசெம்பர் 21 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு அனுராதபுரத்திற்கும் வவுனியாவிற்கும் இடையில் ரயில் சேவைகள் இடம்பெறாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, கோட்டையிலிருந்து அநுராதபுரத்திற்கு மாத்திரமே ரயில் சேவைகள் இடம்பெறும்.

இந்த நிலையில், அனுரதபுரத்திலிருந்து வவுனியா வரை பயணிகளை ஏற்றிச் செல்ல பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறை - முறிகண்டி இடையே மாத்திரம் பயணிக்கும் யாழ்ராணி ரயில், குறித்த ஐந்து மாத காலப்பகுதியில் வவுனியா வரை சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X