Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூன் 04 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரயில் பயணச்சீட்டை பரிசோதிக்க வரும் டிக்கெட் பரிசோதகர்கள், சீருடையுடன் இருப்பது கட்டாயம் என்று ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.
சீருடை அணியாமல் வரும் டிக்கெட் பரிசோதகர்களால் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர்.
பயணச் சீட்டை பரிசோதிக்க வரும் போது சீருடை அணிந்திருக்கும் அதேவேளை, அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும் என்றும் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் பயணிகள் கேட்கும் சந்தர்ப்பத்தில் அடையாள அட்டையை காட்டுவதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.
இதேவேளை, பயணச் சீட்டு இல்லாமல் பயணிக்கும் நபருக்கு அபராதம் விதித்தல், அபராதம் செலுத்த முடியாதவர்களுக்கு பிணை வழங்குதல், அபராதம் செலுத்த தவறுபவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்து சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் டிக்கெட் பரிசோதகருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.
11 minute ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
6 hours ago
6 hours ago
7 hours ago