2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ரயில் விபத்துக்களில் மூவர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேலியகொட, வெள்ளவத்தை மற்றும் அம்பன்பொல ஆகிய இடங்களில் நேற்று திங்கட்கிழமை (08) இடம்பெற்ற ரயில் விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

களனிப் பகுதியிலுள்ள ரயில் கடவை, துவிச்சக்கரவண்டியில் கடக்க முற்பட்ட வேளை 64 வயதுடைய முதியவரை, கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் மோதி அவர் உயிரிழந்துள்ளார். 

இதேவேளை, வெள்ளவத்தைப் பகுதியிலுள்ள ரயில் கடவையைக் கடக்க முயற்சித்த 49 வயதுடைய நபரொருவர், மாத்தறையிலிருந்து கண்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.

மேலும், கொன்கடவெல, அம்பன்பொல ரயில் ஓடு பாதையில் தனிமையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த 50 வயதுடைய நபரொருவர், அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் மோதி, நேற்று திங்கட்கிழமை (08) மாலை உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்விபத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X