2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ரயில் விபத்தில் ஐவர் பலி

George   / 2016 நவம்பர் 27 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட் மொல்லிகொட பகுதியில், ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில், ஐவர் பலியாகியுள்ளனர்.

களுத்துறையிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கிப் பயணித்த ரயிலிலேயே, காரொன்று மோதி விபத்துக்குள்ளானது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3:30க்கு இடம்பெற்றதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

குடாவஸ்கடுவை, வஸ்கடுவ, பண்டாரகம, வாதுவை ஆகிய இடங்களை வதிவிடமாகக் கொண்ட கருணாமுனி கொல்விந்த சில்வா (வயது 60), கருணாமுனி பியல்த சில்வா(வயது 49), கருணாமுனி சந்திர பிரேமலால் சில்வா (வயது 53), சந்திரசில்வா (வயது 45), துமிந்த யாப்பா( வயது 43) ஆகியோரே பலியாகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .