Editorial / 2025 நவம்பர் 24 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரொசேரியன் லெம்பட்
மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில், அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் ஈழத்தமிழர்கள் ஞாயிற்றுக்கிழமை (23) போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக் (Andrew Patrick) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருக்கு இடையிலான பத்தரமுல்ல பெலவத்த யில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (14) முற்பகல் சந்திப்பு இடம் பெற்றது.
இதன் போது இலங்கையின் நிகழ்கால அரசியல் நிலைமைகள் பற்றியும் பிரித்தானியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நிலவுகின்ற நீண்டகால நட்புறவு பற்றியும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
குறிப்பாக பிரித்தானியா எதிர்காலத்தில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவர், ஞாயிற்றுக்கிழமை (23) பிரித்தானியாவுக்கான சுற்றுப்பயணம் ஒன்றை முன்னெடுத்த தாகவும் இதன் போதே ஈழத்தமிழர்கள் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
36 minute ago
40 minute ago
45 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
40 minute ago
45 minute ago
49 minute ago