Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.பாரூக் தாஜுதீன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் நடத்துவதற்கு, கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (04) அனுமதியளித்தது.
வழக்கைத் தாக்கல் செய்த ரவிராஜின் குடும்பமும் சட்டமா அதிபரும் முன்வைத்த கோரிக்கையைக் கருத்திற்கொண்டே, இந்த அனுமதியை, மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக வழங்கினார்.
எனினும், விசேட ஜூரிகளின் பங்களிப்போடு இந்த விசாரணையை நடத்துவதற்கு, சந்தேநபர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக, தீர்ப்பேதும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு, இம்மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நடராஜா ரவிராஜ் எம்.பியும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும், கடந்த 2006ஆம் ஆண்டில், நாரஹேன்பிட்டியில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக, சந்தேகநபர்கள் ஆறு பேருக்கு எதிராக, சட்டமா அதிபர் திணைக்களத்தினால், மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த ஆறு பேரில் மூவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் கருணா அணியைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படுவதோடு, அவர்கள், இந்த வழக்கு விசாரணையின் ஆரம்பத்திலிருந்தே, நீதிமன்றத்தில் ஆஜராகுவதைத் தவிர்த்து வருகின்றனர். எனவே, அவர்களின்றியே, இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட ஏனைய மூவரான, கடற்படையின் முன்னாள் உறுப்பினர்கள், அரசாங்கத் தரப்பு சாட்சிகளாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
43 minute ago
59 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
59 minute ago
2 hours ago
4 hours ago