Niroshini / 2021 மே 17 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், நாளைய (18) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கான அனுமதியை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வழங்கியுள்ளார்.
ரிஷாட் பதியூதீன் கோரிக்கை விடுத்தால் மாத்திரமே அவரை பாராளுமன்றத்துக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார்.
ரிஷாட்டை பாராளுமன்றத்துக்கு அழைத்து வரும்போது, சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை சி.ஐ.டியினர் பின்பற்ற வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, மரணதண்டனைக் கைதியான பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவும் கோரிக்கை விடுத்தால், அவரையும் பாராளுமன்றத்துக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சிறைச்சாலை அதிகாரிகளுக்குப் படைக்கல சேவிதரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பாராளுமன்ற அமர்வில் ரிஷாட் கலந்துகொள்வாரென எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும் அவர் அழைத்து வரப்படவில்லை. இதனால், பாராளுமன்றில் எதிர்க்கட்சியினருக்கும் ஆளுங்கட்சியினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago