2025 ஒக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை

ரஷ்ய தடுப்பூசி குறித்து இலங்கை கடுமையான எச்சரிக்கை

Freelancer   / 2025 ஒக்டோபர் 18 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசியான 'என்டோரோமிக்ஸ்' (Enteromix) புற்றுநோயை குணப்படுத்தும் என்ற தகவலை இலங்கை சுகாதார அதிகாரிகள் மறுத்துள்ளனர்.. 

குறித்த தடுப்பூசி இன்னும் ஆரம்பக்கட்ட பரிசோதனை நிலையிலேயே (pre-clinical stage) இருப்பதாகவும், அறிவியல் ரீதியான சரிபார்ப்பு மூலம் அதன் செயற்திறன் இன்னும் நிரூபிக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

என்டோரோமிக்ஸ் தடுப்பூசி “100 சதவீதம் புற்றுநோயை குணப்படுத்தும்” எனக் கூறி வைரலாக பரவும் பதிவுகள் மற்றும் சர்வதேச அறிக்கைகளுக்கு மத்தியில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. 

புற்றுநோய் சிகிச்சையில் எந்தவொரு முன்னேற்றமும் வரவேற்கத்தக்கது என்றாலும், இந்த தடுப்பூசி இன்னும் ஆரம்பக் கட்ட வளர்ச்சியில் தான் உள்ளது என சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதன் செயற்திறன் குறித்து எந்த முடிவுகளையும் எடுப்பதற்கு முன், இது சரியான புற்றுநோயியல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .