2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ராகமையில் கண்கலங்கச் செய்த சம்பவம் பதிவு

A.Kanagaraj   / 2021 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராகம வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர்களில் ஒருவர், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சைப்பெற்றுவந்த வைத்தியர், இன்று (18) காலை மரணமடைந்துவிட்டார்.

ராகம வைத்தியசாலையில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை பிரிவில் கடமையாற்றிய 34 வயதான வைத்தியரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

கொ​ரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேற்படி வைத்தியர், ராகம வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் சிகிச்சைப்பெற்றுவந்தார். அதன்பின்னர், அவசர சிகிச்சைப் ​பிரிவில் அனுமதிக்கப்பட்டு, இரண்டு வாரங்கள் அங்கு சிகிச்சைப்பெற்றுவந்தார்.

இன்றுக்காலை மரணமடைந்த அந்த வைத்தியர், கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் ஏற்றிக்கொள்ளாத ஒருவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X