Freelancer / 2021 ஜூலை 25 , பி.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கெப்பிடல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் ஆர்.ராஜமகேந்தினின் மறைவு செய்தி அறிந்து நான் மிகவும் மனவருத்தமடைந்தேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அவர் அனுப்பியிருந்த இரங்கல் செய்தியிலேயே மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
திறமையான தொழிலதிபராக இந்நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வணிக வலையமைப்பை பராமரித்து வந்த ஆர்.ராஜமகேந்திரன். அதனூடாக இலட்சக்கணக்கான மக்களுக்கு உறுதுணையாக விளங்கினார்.
சிரச, சக்தி, MTV ஆகிய ஊடக வலையமைப்பின் உரிமையாளராக மக்களின் தகவல் அறியும் உரிமைக்காக தொடர்ந்தும் முன்நின்ற ஆர்.ராஜமகேந்திரன், நமது நாட்டின் தொலைக்காட்சி மற்றும் வானொலி துறையை நவீனமயப்படுத்துவதில் முன்னோடியாக திகழ்ந்தார்.
மக்களுக்கு உண்மை செய்தியை வழங்குவதற்கும் மேலாக ‘கம்மெத்த’ போன்ற நிகழ்ச்சிகளின் ஊடாக கிராம மக்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்த ஆர்.ராஜமகேந்திரன், ஒரு திறமையான தொழிலதிபராகவும் சமூக சேவையாளராகவும் இந்நாட்டிற்காக தனது கடமையை நிறைவேற்றியுள்ளார்.
ஆர்.ராஜமகேந்திரனின் பிரிவால் வாடும் அவரது மனைவி, புதல்வர் ஷஷீ ராஜமகேந்திரன், புதல்விகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அனைத்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கெப்பிடல் மஹாராஜா குழுமம் உள்ளிட்ட சிரச, சக்தி, MTV. ஊடக வலையமைப்பை சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டிருந்தது.
20 minute ago
23 minute ago
35 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
23 minute ago
35 minute ago
45 minute ago