2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ராஜிதவை ஒழித்து வைத்தவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

Editorial   / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜிதவை ஒழித்து வைத்து உதவி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

உடுகம்பொல பிரதேசத்திலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ராஜிதவை கைதுசெய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த இரண்டு நாள்களிலும் அவர், நாட்டின் முன்னாள் தலைவரின் வீட்டில் மறைந்திருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. எனவே, ராஜிதவுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களுக்கு எதிராக, தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .