2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ரியூனியனில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

Editorial   / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ்க்கு சொந்தமான ரியூனியன் தீவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 64 இலங்கையர்கள் அங்கிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

குறித்த 64 பேரும் 737- 800 போயிங் ரக விசேட இன்று மாலை 2.55 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர். விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்.

இவர்கள் படகு மூலம் சட்டவிரோதமாக ரியூனியன் தீவுக்கு நுழைந்து தங்கியிருந்த வேளையிலேயே, பிரான்ஸ் பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

இதில் 54 ஆண்களும், 6 பெண்கள், 4 குழந்தைகள் அடங்குவதாகவும் இவர்கள் யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, சிலாபம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவர்களுடன் பிரான்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் 70 பேரும் வருகைத் தந்ததுடன், இவர்கள் 4.30 மணியளவில் பிரான்ஸ் நோக்கி பயணமாகியுள்ளனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .