2025 மே 02, வெள்ளிக்கிழமை

ரிஷாட்டின் இல்லத்தில் தடயவியல் ஆய்வு

Freelancer   / 2021 ஓகஸ்ட் 02 , பி.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கொழும்பிலுள்ள வீட்டை அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, இன்று ஆய்வு செய்துள்ளது என்று அரச இரசாயன பகுப்பாய்வாளர் கௌரி ரமணா தெரிவித்தார்.

வீட்டிலுள்ள பல இடங்கள் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் 
ஆய்வு செய்யப்பட்ட இடங்களில் பணிப்பெண்ணாக வேலைசெய்தபோது, எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்த தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியின் அறையும் உள்ளடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறுமியின் மரணம் தொடர்பில் ரிஷாட் எம்.பியின் மனைவி உட்பட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .