2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ரூ. 1,000க்கான பேச்சு 1 மணிக்கு

Editorial   / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டுமென்றும் இந்த விவகாரத்தில், அரசாங்கம் தலையிடத் தவறும் பட்சத்தில், தான் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யப்போவதாகவும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி தொடர்பான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பள விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை, அலரி மாளிகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், இன்று பிற்பகல் 1 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதில், அமைச்சர்களான பழனி திகாம்பரம், மனோ கணேசன், நவீன் திசாநாயக்க, அமைச்சரவை அ​ந்தஸ்தற்ற தொழில் அமைச்சர் ரவீந்திர சமரவீர ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

தவிர, முதலாளிமார் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் மற்றும் தோட்டத் ​தொழிலாளர் சங்கங்கள் என்பனவும், இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .