Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2023 நவம்பர் 29 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் இருந்து படகு மூலம் கடத்திச் செல்லப்பட்ட சுமார் ரூ.2.20 கோடி மதிப்பிலான 3.5 கிலோ கிராம் தங்கம் பாம்பன் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டபோது இன்று புதன்கிழமை (29) அதிகாலை 4 மணியளவில் ஒரு நாட்டுப் படகு சந்தேகத்திற்கிடமாக இந்தியா பாம்பன் அருகே நின்றது.
அதனையடுத்து படத்திலிருந்து நான்கு பேரும் கரையை நோக்கி வரும் போது மறைந்து இருந்த அதிகாரிகள் அவர்களை பிடிக்க முயன்ற போது தாங்கள் கொண்டு வந்த பொதியை படகில் விட்டு கடலில் குதித்து தப்பியுள்ளனர்.
பின்னர் கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகை சோதனையிட்ட போது அதில் சுமார் 3.5 கிலோ கடத்தல் தங்க கட்டிகள் இருந்ததுள்ளதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் கொண்டு சென்று சோதனை செய்தனர்.
மேலும் தப்பி ஓடியவர்கள் குறித்து சுங்கத்துறை மற்றும் பொலிஸாரிடம் தகவல் கொடுத்து அவர்களை தேடி வருவதோடு, தொடர்ந்து தப்பியோடியவர்கள் மற்றும் கடத்தலில் தொடர்புடைய நபர்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. M
எஸ்.றொசேரியன் லெம்பேட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .